பங்குச் சந்தைகளில் சரிவு!

திங்கள், 12 மே 2008 (11:00 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் சரிந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது ( 10.05 மணி நிலவரப்படி) மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 102 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,634.60 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 42 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 4,940.95 ஆக குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளின் சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன. வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தது.

மும்பை சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது உலோக உற்பத்தி, ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண்கள் அதிக அளவு சரிந்தன.

உலோக உற்பத்தி நிறுவனங்கள் உருக்கு விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிர‌ம் வரை குறைக்க சம்மதித்து உள்ளன. அதே நேரத்தில் ஏற்றுமதி செய்யப்படும் உருக்கு பொருட்களுக்கு மத்திய அரசு அண்மையில் ‌வி‌தித்த ஏற்றுமதி வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

உருக்கு ஆலைகள் விலையை குறைக்க சம்மதித்துள்ள அதே நேரத்தில் சிமெண்‌ட் ஆலைகள், சிமெண்ட் விலையை குறைக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லை.

இது போன்ற காரணங்களினால் ரியல் எஸ்டேட் பிரிவு குறியீட்டு எண்கள் அதிக அளவு குறைந்தன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 110.03 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 16,627.04 ஆக இருந்தது.

அதே போல் தேசிபங்குசசந்தையினநிஃப்டி 43.30 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,939.30 ஆக சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 171.99, சுமால் கேப் 208.38 பி.எஸ்.இ. 500- 93.27 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 356 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,640 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 28 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,304.20 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,923.54 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.619.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,261.40 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,081.24 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.180.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 120.90, நாஸ்டாக் 5.72 புள்ளிகள் குறைந்தது.

இன்று காலை ஆசிய நாட்டு பங்குசசந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தது.

தெனகொரியாவினசியோலகாம்போசிட் 24.30, ஹாங்காங்கினஹாங்செங் 386.62, சீனாவின் சாங்காய் காம்போசிட் 53.01 குறைந்து இருந்தது.

அதே நேரத்தில் சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 7.64, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 81.31 புள்ளி அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்