தங்கம் வெள்ளி விலை உயர்வு!
வியாழன், 8 மே 2008 (13:54 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் வர்த்தகர்கள் அதிக அளவு தங்கம், வெள்ளியை வாங்கியதால், தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.
அயல்நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவலையடுத்து, வர்த்தகர்கள் தங்கம் வெள்ளி வாங்கியதாக, முன்னணி வர்த்தகர் தெரிவித்தார்.
இன்று மும்பையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.55ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்தது.
இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து உள்ள அதே வேளையில், இதன் விலைகள் அமெரிக்க சந்தையில் நேற்று சிறிது குறைந்தன.
நியுயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 867.60/868.60 டாலராக குறைந்தது. செவ்வாய் கிழமை இறுதி விலை 870.85/872.05 டாலர்.
அதே போல் வெள்ளியின் 1 அவுன்ஸ் 16.58/16.64 டாலராக குறைந்தது. அதிகரித்தது. முந்தைய நாள் விலை 16.60/16.66.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,770
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,710
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,030