பங்குச் சந்தைகளில் ஏற்றம்!

வெள்ளி, 2 மே 2008 (11:06 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 292.65 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,579.96 ஆக உயர்ந்தது.

இதே போல் நிஃப்டி 70.25 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5,236.15 ஆக உயர்ந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் உயர்ந்து இருந்தன. இதே போல் நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

இதனால் இன்று இந்திய பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 10.35 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 221.87 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,509.18 ஆக இருந்தது.

தேசிபங்குசசந்தையினநிஃப்டி 52.15 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5218.05 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 97.31, பி.எஸ்.இ. 500- 84.17, சுமால் கேப் 82.86 புள்ளிகள் அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் சென்செக்ஸ், நிஃப்டி உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1419 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 446 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 33 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

புதன் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,414.15 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,565.83 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.151.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,389.73 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,328.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.38.58 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 189.87, நாஸ்டாக் 67.91, எஸ் அண்ட் பி 500 23.75 புள்ளி அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று நடந்த வர்த்தகத்தில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. இன்றும் இதே நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிநாட்டபங்குசசந்தைகளில், சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்தும், சிலவற்றில் சரிந்தும் இருந்தன.

தெனகொரியாவினசியோலகாம்போசிட் 22.11, சிங்கப்பூரினஸ்டெய்ர்டடைம்ஸ் 71.72, சீனாவின் சாங்காய் காம்போசிட் 419.33, ஜப்பானின் நிக்கி 261.49, ஹாங்காங்கினஹாங்செங் 493.25 புள்ளிகள் அதிகரித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்