தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

வியாழன், 24 ஏப்ரல் 2008 (14:38 IST)
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.355-ம், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.135-ம் குறைந்தது.

ஆனால் மற்ற நாடுகளில் ‘யூரோ, யென் நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததால், வெள்ளியின் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை குறைந்தது.

நியுயார்க் சந்தையில் நேற்று 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 907.00/908.10 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 920.65/922.05 டாலர்.

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.15/17.21 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 17.14/17.20 டாலர்.


இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,805
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,750
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,340

வெப்துனியாவைப் படிக்கவும்