பங்குச் சந்தை: சென்செக்ஸ் 346 புள்ளிகள் உயர்வு!

செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (17:06 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்திருந்த குறியீட்டு எண்கள் காலை 11.30 மணியளவில் அதிகரிக்க துவங்கின.

காலையில் சிறிதளவு ஏற்ற இறக்கமாக இருந்த குறியீட்டு எண்கள், இறுதியில் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட சென்செக்ஸ், நிஃப்டி உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் குறைந்தாலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் இன்று சாதகமான போக்கு நிலவியது. இதனால் இந்திய பங்குச் சந்தையில் எல்லா குறியீட்டு எண்களும் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 346.02 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,153.66 ஆக அதிகரித்தது.

ி.எஸ்.இ. 500- 124.34, சுமால் கேப் 122.95, மிட் கேப் 81.20புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 101.85 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 4879.65 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 148.60, சி.என்.எக்ஸ்.100- 95.85, சி.என்.எக்ஸ்.டிப்டி 87.60, சி.என்.எக்ஸ். 500- 76.30, சி.என்.எக்ஸ். மிட் கேப் 98.35, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-42.30, சி.என்.எக்ஸ். ஐ.டி 208.35, பாங்க் நிஃப்டி 78.30 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,784 பங்குகளின் விலை அதிகரித்தது. 875 பங்குகளின் விலை குறைந்தது. 50 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் தகவல் தொழில் நுட்ப பிரிவு 5.55%, வங்கி பிரிவு 1.28%, தொழில்நுட்ப பிரிவு 4.08%, உலோக உற்பத்தி பிரிவு 0.37%, வாகன உற்பத்தி பிரிவு 0.86%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.16%,, ரியல் எஸ்டேட் 1.99%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 2.77%, மின் உற்பத்தி பிரிவு 1.88%, பொதுத்துறை நிறுவனங்கள் 2.32% அதிகரித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்