காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 20 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5 புள்ளிகள் குறைந்தது. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்து வருகின்றன.
நேற்று பங்குகளின் விலைகள் குறைவாக இருந்ததால், முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இன்று லாப கணக்கு பார்ப்பதற்காக விற்பனை செய்யும் போக்கு நிலவுவதால், குறியீட்டு எண்கள் குறைந்ததாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 269 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,488.00 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 75 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4686.20 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 3.57, பி.எஸ்.இ. 500- 69.73, சுமால் கேப் 4.81 புள்ளிகள் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் 907 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1090 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 61 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 3.01, எஸ்.அண்ட் பி 2.14 புள்ளி அதிகரித்தது.ஆனால் நாஸ்டாக் 6.15 புள்ளி குறைந்து இருந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 19.36, ஹாங்காங்கின் ஹாங்செங் 110.75, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 12.87, ஜப்பானின் நிக்கி 193.39 புள்ளி குறைந்து இருந்தது. ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 159.32 புள்ளி அதிகரித்து இருந்தது.
ஆசிய பங்குச் சந்தையில் முக்கியமான பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்து உள்ளன. இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு துவங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் சூழ்நிலையை பொறுத்து, இங்குள்ள பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெய், தங்கம் போன்ற அரிய உலோகங்களின் மீது முதலீட்டு நிறுவனங்களின் கவனம் திரும்பியுள்ளது. இவைகளின் விலை உலக சந்தையில் அதிகரித்து வருகின்றன.