பங்குச் சந்தைக‌ளி‌ல் உயர்வு!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:02 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டபங்குசசந்தைகளிலுமகுறியீட்டஎண்கள் அதிகரித்து இருந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 610.08 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,236.70 ஆக உயர்ந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 177.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,916.75 ஆக அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இன்று குறியீட்டு எண் உயர்வு, சந்தை வட்டாரங்களில் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாது, எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை நிலவுகின்றது.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 383.32 புள்ளிகளஅதிகரித்து குறியீட்டஎண் 16,009.94 ஆக இருந்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 98.40 புள்ளிகளஅதிகரித்து குறியீட்டு எண் 4837.95 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 121.29, பி.எஸ்.இ.500-144.64, சுமால் கேப் 161.66 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிபங்குசசந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 1,927 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 405 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 40 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 391.47, நாஸ்டாக் 63.65, எஸ் அண்ட் பி 500-47.46 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 37.45, சீனாவின் சாங்காய் காம்போசிட் 224.24. ஆனால் சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 80.09, ஜப்பானின் நிக்கி 464.52, ஹாங்காங்கினஹாங்செங் 1,017.29 புள்ளிகள் உயர்ந்து இருந்தது.

அமெரிக்க ப‌ங்குச் சந்தையிலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து உள்ளது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் நேற்று அதிகரித்தது.

இன்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான போக்கு நிலவுகிறது.

ஹெட்ச் பண்டுகள் உட்பட பல்வேறு முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பண்டக சந்தையில் இருந்து, பங்குச் சந்தைக்கு முதலீடுகளை திருப்பி விட்டுள்ளனர். இன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்