பங்குச் சந்தைகளில் உயர்வு!

செவ்வாய், 25 மார்ச் 2008 (18:27 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், தொடர்ந்து மாலை வரை அதிகரித்தன.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, அமெரிக்கா, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் மதியம் 1 மணியளவில் சென்செக்ஸ் 16 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. கடந்த இரண்டு மாதங்களில் முதன் முறையாக இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 928 புள்ளிகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.5,020.45 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. அதே போல் ரூ.3,774.33 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இன்றைய இறுதி நிலவரப்படி அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,246.12 கோடி முதலீடு செய்தன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,413.70 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. ஆனால் ரூ.1,013.73 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை ரூ.399.97 கோடி முதலீடு செய்துள்ளன.

இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 928.09 புள்ளிகள் அதிகரித்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் 16,217.49 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 267.65 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,877.50 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 334.52, மிட் கேப் 368.96,பி.எஸ்.இ. 500-362.26 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 615.90, சி.என்.எக்ஸ். ஐ.டி 268.30, பாங்க் நிஃப்டி 512.55, சி.என்.எக்ஸ் 100-269.40, சி.என்.எக்ஸ் டிப்டி 248.20, சி.என்.எக்ஸ் 500-223.30, சி.என்.எக்ஸ் மிட் கேப் 354.60,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-138.40 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 2,075 பங்குகளின் விலை அதிகரித்தது, 640 பங்குகளின் விலை குறைந்தது, 47 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவு 7.73%, பொதுத்துறை நிறுவனங்கள் 5.54%, வாகன உற்பத்தி பிரிவு 4.03%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 4.85%, தொழில்நுட்ப பிரிவு 6.34%, வங்கி பிரிவு 8.10%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 5.94%, மின் உற்பத்தி பிரிவு 6.45%, ரியல்எஸ்டேட் 9.48%, உலோக உற்பத்தி பிரிவு 6.41% அதிகரித்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 பங்குகளின் விலையும் அதிகரித்தது.

விலை அதிகரித்த பங்குகள்:

அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை அதிகரித்த விலை விவரம்.

1. ஏ.சி.சி. ரூ.815.60 (ரூ.10.45)
2..அம்புஜா சிமெண்ட் ரூ.124.55 (ரூ.00.50)
3. பார்தி ஏர்டெல் ரூ.834.35 (ரூ.33.85)
4. பி.ஹெச்.இ.எல். ரூ.2012.55 (ரூ.141.20)
5. சிப்லா ரூ.209.75 (ரூ.03.60)
1. டி.எல்.எப். ரூ.678.65 (ரூ.80.55)
6. கிராசிம் ரூ.2686.80 (ரூ.66.90)
7. ஹெச்.டி.எப்.சி. ரூ.2589.75 (ரூ205.70)
8. ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1417.90 (ரூ.80.45)
2. ஹின்டால்க ரூ.163.15 (ரூ.09.30)

9. ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.244.95 (ரூ.09.95)
10. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.879.95 (ரூ.75.40)
11. இன்போசியஸ் ரூ.1492.55 (ரூ.131.20)
12. ஐ.டி.சி. ரூ.191.10 (ரூ.00.20)
3. ஜெய்பிரா ரூ.233.10 (ரூ.32.80)
13. எல்.அண்ட்.டி ரூ.3054.90 (ரூ.117.70)
4. மாருதி ரூ.844.75 (ரூ.33.05)

14. மகேந்திரா அண்ட்
மகேந்திரா ரூ.679.75 (ரூ.15.60)
5. என்.டி.பி.சி. ரூ.199.60 (ரூ.08.35)
15. ஓ.என்.ஜி.சி. ரூ.1074.95 (ரூ.72.70)
6. ரான்பாக்ஸி ரூ.451.55 (ரூ.05.30)
16. ரிலையன்ஸ் கம்யூனி ரூ.5038.20 (ரூ.29.45)
7. ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1300.15 (ரூ.149.25)
17. ரிலையன்ஸ் இன்டஸ ரூ.2314.40 (ரூ.113.60)
18. சத்யம் ரூ.411.05 (ரூ.19.95)
19. எஸ்.பி.ஐ. ரூ.1740.20 (ரூ.94.55)
20. டாடா மோட்டார்ஸ் ரூ.679.95 (ரூ.17.60)
8. டாடா ஸ்டீல் ரூ.633.80 (ரூ.41.35)
21. டி.சி.எஸ். ரூ.875.95 (ரூ.52.50)
22. விப்ரோ ரூ.434.70 (ரூ.35.95)

வெப்துனியாவைப் படிக்கவும்