மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சரிந்து அதிகரித்த குறியீட்டு எண்கள் தொடர்ந்து அதிகரித்தன. ஆனால் இன்று காலை முதல் இறுதி வரை சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை ஒரே நிலையாக இல்லாமல் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையில் மதியம் 1 மணியளவில் நிஃப்டி கடந்த புதன் கிழமை இறுதி நிலவரத்தை விட குறைந்தது. மாலை 3 மணியளவில் அதிகரித்து, இறுதியில் நிஃப்டி 36 புள்ளி உயர்வுடன் முடிந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் சென்ற வார இறுதி நிலவரப்படி டோவ் ஜோன்ஸ் 261.66 புள்ளி, நாஸ்டாக் 48.15 புள்ளி, எஸ் அண்ட் பி 31.09 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது மற்ற ஆசிய பங்குச் சந்தைகளிலும் இதே நிலையே இருந்தது. காலையில் அதகரித்த ஜப்பானின் நிக்கி மாலையில் குறைந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.
இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருந்தது. ஆனால் சென்செக்ஸ், நிஃப்டி தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப்,சுமால் கேப் பிரிவு பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டன.
இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கூ.2,884.39 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. அதே போல் ரூ. 2,503.26 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இன்றைய இறுதிநிலவரப்படி அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.376.13 கோடி முதலீடு
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.836.61 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. ஆனால் ரூ.1,089.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை ரூ.253.27 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 294.57 புள்ளிகள் அதிகரித்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் 15,289.40 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 35.90 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,609.85 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 272.08, மிட் கேப் 158.57 புள்ளிகள் குறைந்தன. ஆனால் பி.எஸ்.இ 500-6.91 புள்ளிகள் அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி 62.10, பாங்க் நிஃப்டி 21.95, சி.என்.எக்ஸ் 100-22.50, சி.என்.எக்ஸ் டிப்டி 43.95 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 92.0, சி.என்.எக்ஸ் 500- 1.35 சி.என்.எக்ஸ் மிட் கேப் 86.40,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-46.55 புள்ளிகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 535 பங்குகளின் விலை அதிகரித்தது. 2149 பங்குகளின் விலை குறைந்தது. 33 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.55%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.26%, வாகன உற்பத்தி பிரிவு 0.0.14%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.99%, தொழில்நுட்ப பிரிவு 1.19%, வங்கி பிரிவு 3.32%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.14% அதிகரித்தன.
ஆனால் மின் உற்பத்தி பிரிவு 0.71%, ரியல்எஸ்டேட் 3.97%, உலோக உற்பத்தி பிரிவு 5.27% குறைந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 22 பங்குகளின் விலை அதிகரித்தது. 8 பங்குகளின் விலை குறைந்தது.