பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 149 புள்ளியும், நிஃப்டி 33 புள்ளியும் அதிகரித்து இருந்தன.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 246.59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,241 புள்ளிகளாக அதிகரித்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50.70 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,624.65 ஆக உயர்ந்தது.
ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 42.48, சுமால் கேப் 77.08 புள்ளி குறைந்து இருந்தது. பி.எஸ்.இ.500-30.04 புள்ளிகள் அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் வங்கி, நிஃப்டி ஜீனியர்,சி.என்.எக்ஸ் மிட் கேப்,மிட்கேப் 50 தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பம்,வாகன உற்பத்தி ஆகிய பிரிவில் உள்ள பங்கு விலைகள் 1 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்து உள்ளது. மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட் பிரிவு நிறுவனங்களின் விலைகள் குறைந்து இருந்தன.
காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிக மாற்றத்துடன் உள்ளன.
அமெரிக்க பங்குச் சந்தையில் சென்ற வார இறுதி நிலவரப்படி டோவ் ஜோன்ஸ் 261.66 புள்ளி, நாஸ்டாக் 48.15 புள்ளி, எஸ் அண்ட் பி 31.09 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 10.26, ஜப்பானின் நிக்கி 40.98, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 74.19 அதிகரித்து இருந்தது. அதே நேரத்தில் ஹாங்காங்கின் ஹாங்செங் 758.72, சீனாவின் சாங்காய் காம்போசிட் 120.90 புள்ளிகள் குறைந்து இருந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்கு சந்தைகளிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், சில பங்குச் சந்தைகளில் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்து இருக்கின்றது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை பொறுத்தே, இன்று பங்குச் சந்தையில் நிலை இருக்கும்.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது ஏற்படும் மாற்றங்களை வைத்தே, இந்திய பங்குச் சந்தையின் இன்றைய போக்கு இருக்கும். காலையில் அதிகரித்த பங்கு விலைகளும், குறியீட்டு எண்களும் அடிக்கடி மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.