மும்பையில் தங்கம் ‌விலை ரூ.335 குறைந்தது!

செவ்வாய், 18 மார்ச் 2008 (16:16 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.645-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.335-ம் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையிலும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்துள்ளது. நியூயார்க்கில் நேற்று அவுன்ஸ் 1,001/1,001.80 அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று காலை 996.30/997.10 டாலராக குறைந்துள்ளது. அவுன்ஸ் 20.35/20.41 அமெரிக்க டாலராக இருந்த வெள்ளியின் விலை இன்று 19.93/19.98 டாலராக குறைந்துள்ளது.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.13,220
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.13,160
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.25,005

வெப்துனியாவைப் படிக்கவும்