மும்பை பங்குச் சந்தை 951 புள்ளிகள் சரிவு!

திங்கள், 17 மார்ச் 2008 (18:52 IST)
நிஃப்டி 242 புள்ளிகள் சரிவ

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சரிந்த குறியீட்டு எண்கள், இறுதி வரை சிறிதும் உயராமல் தொடர்ந்து சரிந்தன.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக குறைந்தன. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 15,326.93 என்ற நிலையில் தொடங்கியது. இன்று வர்த்தகம் நடந்த போது ஒரு நிலையில் சென்செக்ஸ் 14,738.27 ஆக குறைந்தது. இன்று மட்டும் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்தது.

இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 951.03 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் 14,809.49 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 242.70 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 4,503.10 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 557.27, மிட் கேப் 459.10,பி.எஸ்.இ. 500-401.33 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 632.50,சி.என்.எக்ஸ் ஐ.டி 124.75, பாங்க் நிஃப்டி 549.80, சி.என்.எக்ஸ் 100-250.10, சி.என்.எக்ஸ் டிப்டி 248.95, சி.என்.எக்ஸ் 500-226.30, சி.என்.எக்ஸ் மிட் கேப் 486.30,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-185.50 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 282 பங்குகளின் விலை அதிகரித்தது. 2,404 பங்குகளின் விலை குறைந்தது. 30 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி நிறுவனங்களின் பிரிவு குறியீட்டு எண் 7.54%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 3.20%, பொதுத்துறை நிறுவனங்கள் 4.97%, மின் உற்பத்தி பிரிவு 5.58%, வாகன உற்பத்தி பிரிவு 4.62%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 6.43%, தொழில்நுட்ப பிரிவு 3.61%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 5.34%, வங்கி பிரிவு 9.06%, ரியல்எஸ்டேட் 7.86% சரிந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்