பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போதே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக அளவு சரிந்தன.
காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது (9.45 மணியளவில்) சென்செக்ஸ் 672.49 புள்ளியும், நிஃப்டி 200.15 புள்ளியும் குறைந்தன.
மற்ற நாடுகளிலும் பங்குச் சந்தையில் கடுமையாக சரிவு ஏற்பட்டது. அந்நிய நாடுகளில் இருந்து வந்த தகவல்களும், பங்குச் சந்தை சரிவுக்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் வங்கி, ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிக அளவு குறைந்தன.
காலை 10.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 745.92 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,014.60 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 214 புள்ளிகள் சரிந்து, குறியீட்டு எண் 4531.80 ஆக குறைந்தது.
அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 296.49, சுமால் கேப் 342.79, பி.எஸ்.இ.500-297.72 புள்ளிகள் குறைந்தன. இது நான்கு விழுக்காட்டிற்கும் அதிகமாகும்.
தேசிய பங்குச் சந்தையில் மற்ற குறியீட்டு எண்களும் 3 முதல் நான்கு விழுக்காடு வரை குறைந்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 194.65, நாஸ்டாக் 51.12 எஸ் அண்ட் பி 27.34 புள்ளிகள் குறைந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 32.74, ஹாங்காங்கின் ஹாங்செங் 890.79, ஜப்பானின் நிக்கி 347.01 , சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 58.11, சீனாவின் சாங்காய் காம்போசிட் 296.28 புள்ளிகள் குறைந்து இருந்தது.