மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் ஒரே நிலையாக இல்லாமல் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்தது.
நண்பகல் இடைவேளைக்கு பிறகு வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை தொடர்ந்து பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
ஆனால் எந்த சந்தர்ப்பதிலும் நேற்றைய இறுதி நிலையை விட குறையவில்லை. மாலை வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 202.19 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 16,542.08 ஆக முடிந்தது.
கடந்த இரண்டு நாட்களில் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் 5,348 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தது. நேற்று ரூ.5,819.09 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 57.15 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,921.40 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 143.49, மிட் கேப் 68.55 புள்ளிகள் குறைந்தன. ஆனால் பி.எஸ்.இ. 500-16.12 புள்ளிகள் அதிகரித்தன.
இன்று நடந்த வர்த்தகத்தில் வாகன உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி, மின் உற்பத்தி, வங்கி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
தகவல் தொழில் நுட்பம், பெட்ரோலிய நிறுவனம், உலோக உற்பத்தி,பொதுத்துறை பங்குகளின் விலைகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி. 120.75, சி.என்.எக்ஸ் 100-39.55, சி.என்.எக்ஸ் டிப்டி 42.85, சி.என்.எக்ஸ் 500-20.35 புள்ளிகள் அதிகரித்தன.
நிஃப்டி ஜீனியர் 98.05, பாங்க் நிஃப்டி 148.25, சி.என்.எக்ஸ் மிட் கேப் 82.55, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50 -24.75 புள்ளிகள் குறைந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 19 பங்குகளின் விலை அதிகரித்தது. 11 பங்குகளின் விலைகள் குறைந்தது.
நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.