பங்குச் சந்தை மாற்றமில்லை!

வியாழன், 28 பிப்ரவரி 2008 (19:25 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் பத்தாவது நிமிடத்திலேயே தொடர்ந்து படிப்படியாக குறைய தொடங்கின.

மாலை வர்த்தகம் முடிவடையும் போது, சென்செக்ஸ் நேற்றைய நிலவரத்தைவிட 1.51 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,824.48 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் காலையில் இருந்து குறைந்து வந்த குறியீட்டு எண், மதியம் 3 மணிக்கு மேல் அதிகரித்தது. இறுதியில் நிஃப்டி 16.70 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,285.10 ஆக அதிகரித்தது.

இன்று ரியல் எஸ்டேட்,வங்கிகள்,மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலை அதிக அளவு குறைந்தது. அதே நேரத்தில் உலோக உற்பத்தி, இயந்திர உற்பத்தி, மருந்து உற்பத்தி, ஆகிய துறைகளில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்தது.
இன்று நடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 133.86 புள்ளிகள் குறைந்து, ஒரு நிலையில் குறியீட்டு எண் 17,690.16 என்ற அளவிற்கு குறைந்தது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ.4,822 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாயின. நேற்று ரூ.5,876.55 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை ஆகி இருந்தது.

1,543 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,398 பங்குகளின் விலை குறைந்தது. 97 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ரியல் எஸ்டேட் பிரிவு குறியீட்டு எண் 146.62, பெட்ரோலிய நிறுவனங்களின் குறியீடு 95.05 , வங்கி பிரிவு 82.61 புள்ளிகள் குறைந்தன.

உலோக உற்பத்தி 330, வாகன உற்பத்தி பிரிவு 56.52 புள்ளிகள் அதிகரித்தன.

சுமால் கேப் 5.73 மிட் கேப் 11.80,பி.எஸ்.இ. 500-0.77 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 136.60, பாங்க் நிஃப்டி 111.35, சி.என்.எக்ஸ் 500-3.60, சி.என்.எக்ஸ் மிட் கேப் 14.10, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-17 புள்ளிகள் குறைந்தன.

சி.என்.எக்ஸ் டிப்டி 7.85, சி.என்.எக்ஸ் ஐ.டி 3.75, சி.என்.எக்ஸ் 100 3.05 புள்ளிகள் அதிகரித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்