வெள்ளிக் கிழமை பங்குச் சந்தைகளில் புரோக்கர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருந்தது. மீண்டும் பங்குகளை வாங்கும் ஆர்வத்தை காண முடிந்தது.
தினசரி வர்த்தக புள்ளி விபரங்களை ஆய்வு செய்தால், திங்கட்கிழமை நிஃப்டி 30 முதல் 40 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கும். நிஃப்டி 5330-5340 என்ற அளவுகளில் வர்த்தகம் நடக்கும். அதற்கு பிறகு நிஃப்டி 5,400 வரை உயரும். அந்த சமயத்தில் இலாப கணக்கை பார்ப்பதற்காக, பங்குகளை விற்பனை செய்ய துவங்குவார்கள். இதனால் குறியீட்டு எண் குறைந்து நிஃப்டி 5240 என்ற அளவிற்கு குறையும். குறைந்த நேரத்திற்கு 5240 என்ற அளவில் நிலைக்கும்.
நிஃப்டி 5340/5375/5400 என்ற் அளவிற்கு அதிகரித்து, 5400 க்கும் மேல் உயர்ந்தால் அதிக அளவு பங்குகளை வாங்குவதை காணலாம். இது மேலும் நிஃப்டி 5450/5500/5540 என்ற அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
இதற்கு மாறாக நிஃப்டி 5240/5200/5175 என்ற அளவில் குறைந்து 5175 என்ற அளவிற்கும் குறைந்தால், அதிக அளவு பங்குகளை விற்பனை செய்வார்கள். இதனால் நிஃப்டி 5140/5100 என்ற அளவு வரை குறைய வாய்ப்புள்ளது. திங்கட் கிழமை ஜே.பி.அசோசியேட்ஸ்,ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,என்.டி.பி.சி,கோடாக் வங்கி,ஆக்ஸ் வங்கி,ஐ.ஓ.சி,டிஸ்கோ,பி.டி.சி ஆகிய பங்குகள் மீது அதிக கவனம் இருக்கும்.
வெள்ளிக் கிழமை கண்ணோட்டம்...
பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்றாம் நாளாக, வெள்ளிக் கிழமையும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. குறிப்பாக உலோக உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன. அத்துடன் மிட் கேப்,சுமால் கேப் பிரிவுகளில் உள்ள பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.
சென்செக்ஸ் 18 ஆயிரத்தையும், நிஃப்டி 5,300 ஐயும் தாண்டியது. அதிக அளவில் மருந்து உற்பத்தி,உலோக உற்பத்தி,பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது காண முடிந்தது. மற்ற பிரிவுகளில் உள்ள பங்குகளுடன் ஒப்பிடுகையில், சென்செக்ஸ், நிஃப்டி பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. இதற்கு காரணம் ஆசியாவின் மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்ததே.
நிஃப்டி முன்பேரச் சந்தையில் ரிலையன்ஸ், எஸ்.பி,ஐ,ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,யூனிடெக்,ரிலையன்ஸ் கேப்பிடல்,ரீலையன்ஸ் பெட்ரோலியம்,ஏ.பி.பி,வோல்டாஸ்,ரிலையன்ஸ் பவர்,ஜே.பி.அசோசியேட்ஸ்,டி.எல்.எப்,அன்சால் இன்ப்ரா,பவர் கிரிட்,ஜி.எம்.ஆர் இன்ப்ராக்சர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மீது அதிக அளவு வர்த்தகம் நடந்தது.