மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே, நேற்று இருந்த நிலைமை மாறியது.
இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ், நிஃப்டி அதிகரித்தது.
வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸ் 233 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,864.33 ஆக இருந்தது. நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 4920.10 ஆக அதிகரித்தது.
காலையில் இருந்த நிலை தொடராமல், பங்குகளின் விலைகள் குறைய தொடங்கின. 11 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 57.70 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,688.61 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 18.80 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 4875.80 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு அதிகரித்தாலும், மற்ற பிரிவில் உள்ள பங்குகளின் விலை குறைந்தது.
மிட் கேப் 162.08, சுமால் கேப் 279.20, பி.எஸ்.இ 500 - 36,87 புள்ளிகள் குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையில் பாங்க் நிஃப்டி, சி.என்.எஸ் 100, சி.என்.எக்ஸ் டிப்டி, சி.என்.எக்ஸ் 500 தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தது.
மற்ற நாட்டு பங்குச் சந்தையை பொறுத்த அளவில் அமெரிக்க பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தது. இதனால் மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது.
அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் 57.88, நாஸ்டாக் 15.21, எஸ் அண்ட் பி 500- 7.84 புள்ளிகள் அதிகரித்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கின் ஹாங்சாங் 458.31, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 45.31, ஜப்பானின் நிக்கி 13.93, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 2.62 புள்ளிகள் அதிகரித்தன. ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 67.35 புள்ளிகள் குறைந்தது.
இன்று பங்குச் சந்தைகளில் காலையில் சென்செக்ஸ். நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகே, இன்றைய பங்குச் சந்தையின் நிலவரம் கணிக்க முடியும்.
மீண்டும் பங்குச் சந்தை முன்னேறுமா அல்லது நேற்றைய நிலைமையே தொடர் கதையாகுமா என தெரிய வரும்.