மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.265-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.80-ம் அதிகரித்துள்ளது. உள்ளூர் வியாபாரிகள் மத்தியில் அதிக ஆர்வம் இருப்பதால், இரண்டு நாட்களில் மட்டும் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.365 அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.11,405க்கு சந்தை நிறைவடைந்தது. ஆனால், கடந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலை ரூ.265 உயர்ந்துள்ளது. இன்று காலை 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.11,710 ஆகவும், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.11,650 ஆகவும் இருந்தநிலையில், சந்தை முடிவில் இரண்டும் முறையே ரூ.11,760 மற்றும் ரூ.11,710 ஆக அதிகரித்துள்ளது. லண்டன் மற்றும் ஆசிய சந்தைகளில், பார் வெள்ளியின் விலை அவுன்சுக்கு 16.75/16.77 டாலராக அதிகரித்துள்ளது. இது நேற்றைய இறுதி நிலவரப்படி, 16.58/16.60 டாலராக இருந்தது. தங்கத்தின்விலையை பொருத்தவரை, அவுன்சுக்கு 903.5/906.10 டாலரில் இருந்து இன்று 910.5/912.10 டாலராக அதிகரித்துள்ளது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,760 (நேற்றைய விலை ரூ.11,685) 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,710 (ரூ.11,630) பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,370 (ரூ.21,105)