பங்குச் சந்தையில் மாற்றம்!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (13:36 IST)
பங்குச் சந்தையில் நேற்று இருந்த நிலைமை இன்று மாறத் தொடங்கியது. மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது

இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம், மற்ற பிரிவுகளில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. இதனால் இவைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

தகவல் தொழில் நுட்ப நிறுவன பிரிவு தவிர மற்ற குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 82.61 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,056.88 புள்ளிகளாக இருந்தது. அதே போல் நிஃப்டி 27.35 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,295.20 ஆக இருந்தது.

குறிப்பாக ஒ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், சத்யம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டு நிறுவனங்களும், தனி நபர்களும் அதிக அளவு விற்பனை செய்தனர்.
இவற்றின் விலை குறைந்து, குறியீட்டு எண்கள் குறைந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 13.70 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,125.79 ஆகவும், நிஃப்டி 2.20 புள்ளிகள் மட்டுமே குறைந்து குறியீட்டு எண் 5,320.35 ஆக இருந்தது.

மற்ற பிரிவில் உள்ள பங்குகளின் விலை காலை முதல் அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில் மிட் கேப் 121.27, சுமால் கேப் 169.87, பி.எஸ்.இ-500 43.78 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற குறியீட்டு எண்கள் 0.71 முதல் 2.12 விழுக்காடு வரை அதிகரித்து இருந்தன.

இன்று மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் நேற்றைய நிலையே தொடர்ந்தது. அமெரிக்காவின் நாஸ்டாக் 30.82, டோவ் ஜோன்ஸ் 65.03, எஸ் அண்ட் பி 500- 10.19 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளை பொறுத்த அளவில் சிங்கப்பூரில் பங்குச் சந்தையில் மாற்றம் இல்லை. தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 6.44,தைவான் 152.86,ஜப்பானின் நிக்கி 107.91 புள்ளிகள் அதிகரித்தன. ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 67.35, ஹாங்காங்கின் ஹாங்சங் 1,339.24 புள்ளிகள் சரிந்தன.

இன்று காலையில் ரிலையன்ஸ் எனர்ஜி, அம்புஜா சிமென்ட், ஆர்.பி.எல், டாடா பவர், பி.பி.சி.எல்., குஜராத் அம்புஜா சிமென்ட், கிரேசம், எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், பஞ்சாப் வங்கி, நேஷனல் அலுமினியம், என்.டி.பி.சி., கெயில், ஏ.பி.பி., செயில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஹெச்.சி.எல். டெக்னாலஜி, டாக்டர் ரெட்டி லேப், ஹெச்.டி.எப்.சி வங்கி ஆகியவற்றின் பங்கு விலை அதிகரித்தது.

ஹீரோ ஹோன்டா, சத்யம் கம்ப்யூட்டர், பஜாஜ் ஆட்டோ, சிப்லா,ஐ.டி.சி,டி.சி.எஸ்., வி.எஸ்.என்.எல்., விப்ரோ, ஹிந்த் லீவர், சன் பார்மா, மாருதி, ஸ்டெர்லிங் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், யூனிடெக், பார்தி ஏர்டெல், ஜி.எஸ்.கே. பார்மா, ரான்பாக்ஸி, எல் அண்ட் டி, ஒ.என்.ஜி.சி., ஐடியா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்