பங்குச் ச‌ந்தை மீளுமா?

வியாழன், 7 பிப்ரவரி 2008 (11:47 IST)
பங்குச் சந்தைகளில் இன்றும் சரிவே காணப்படும். வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 5270-5250 என்ற அளவில் தொடங்கும். இதற்கு பிறகு மேலும் சரியவும் வாய்ப்பு உள்ளது. 5070 என்ற அளவில் நிலை கொள்ளும். நிஃப்டி 5350 என்ற அளவில் அதிகரித்தால் மட்டுமே, பங்குகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நிஃப்டி 5350/5400/5450 என்ற அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 5450 க்கு மேல் உயர்ந்தால் பங்குகளை அதிக அளவு வாங்குவார்கள். இதனால் விலை அதிகரித்து குறைந்த நேரத்திற்கு 5500/5630 வரை உயர வாய்ப்பு உள்ளது.

இதற்கு மாறாக நிஃப்டி 5270/5235/5180 வரை சரிந்தால், பங்கு விலைகள் மேலும் குறைந்து 5070 வரை குறியீட்டு எண்கள் சரிய வாய்ப்பு உள்ளது. இன்று நிஃப்டி வாரத்தின் குறைந்த அளவான 5,070 வரை குறைந்தால், பங்குகளின் விலை சரிந்து குறைந்த நேரத்திற்கு 4900/4690 வரை குறைய வாய்ப்பு உள்ளது.

இன்று நாகர்ஜீனா பெர்டிலைசர், கெயில், ஆர்சிட் கெமிக்கல்ஸ்,ஆர்.என்.ஆர்.எல்,டி.டி.எம்.எல்,இஸ்பாட் இன்டஸ்டிரிஸ், இனோக்ஸ், கிளாஸ்கோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,ஷோபா டெவலப்பர்ஸ் ஆகிய பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடக்க வாய்ப்பு உள்ளது.

நேற்றைய சந்தை

பங்குச் சந்தைக்கு நேற்று மோசமான நாள் என்று கூறலாம். காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறைந்த குறியீட்டு எண்கள் கடைசி வரை உயரவே இல்லை. முந்தைய நாளை விட, பங்கு குறியீட்டு எண்கள் சரிந்தன.

அமெரிக்க பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ள சேவைத்துறையின் நெருக்கடியால், அந்நாட்டு பொருளாதாரம் மீட்சி அடைவதற்கே வாய்ப்பு குறைவு என்பது தெளிவாகியது. இதனால் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் பாதிக்கப்பட்டன.

இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், கடந்த சில நாட்களாக சர்வதேச அளவில் என்ன நடக்கிறதோ, அதன் பாதிப்பும் இங்கு இருக்கிறது. முன்பு மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகள் சரியும் போது இங்கும் காலையில் சரியும். ஆனால் மதியத்திற்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஆனால் இப்போது அப்படி நடக்கவில்லை.

நாகர்ஜீனா பெர்டிலைசர், சம்பல் பெர்டிலைசர், ஆர்.என்.ஆர்.எல், எம்.ஆர்.பி.எல், இஸ்பாட் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் பெர்ரோலியம், ஆர்சிட் கெமிக்கல்ஸ், டி.டி.எம்.எல், நெய்வேலி லிக்னைட், கெயில்,தீபக் பெர்டிலைசர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவு விற்பனையாயின. நேற்று 62,441.10 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்