பங்குச் சந்தை 524 புள்ளிகள் சரிவு!

புதன், 6 பிப்ரவரி 2008 (19:10 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 524 புள்ளிகள் சரிந்தது. கடந்த இரண்டு வாரங்களில் இன்றுதான் அதிக அளவு பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்தன. இதற்கு முன் ஜனவரி 22 ந் தேதி 870 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 161.35 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5322.55 ஆக குறைந்தது.

அமெரிக்க பொருளாதாரம் ஏற்கனவே மறு கடன் பிரச்சனையால் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இத்துடன் அந்நாட்டு பொருளாதாரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சேவைத்துறை முடங்கி போய் இருப்பதாக வந்த தகவல், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு போன்றவைகளால் பங்குச் சந்தை பாதிப்பு அடைந்தது.
இதன் தொடர்ச்சியாக இந்தியா உட்பட எல்லா ஆசிய நாட்டு சந்தைகளிலும் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் சென்செக்ஸ் 720 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 18 ஆயிரத்தை விட குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. மிட் கேப் 100.55, சுமால் கேப் 53.97, பி.எஸ்.இ-500 177.69 புள்ளிகள் சரிந்தன.
இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 244.35, சி.என்.எக்ஸ் ஐ.டி 216.10 பாங்க் நிப்டி 212.15, சி.என்.எக்ஸ் 100-152.75, சி.என்.எக்ஸ் டிப்டி 160.50, சி.என்.எக்ஸ் 500- 113.90, சி.என்.எக்ஸ் மிட் கேப் 126.70, சி.என்.எக்ஸ் 50-23.15 புள்ளிகள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 28 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. இரண்டு நிறுவனங்களின் பங்கு விலை மட்டும் அதிகரித்தது.

விலை குறைந்த பங்குகளின் விபரம்.
ஏ.சி.சி. பங்கு விலை ரூ.4.35 குறைந்து பங்கின் விலை ரூ.764.85 ஆக குறைந்தது.
அம்புஜா சிமெண்ட் பங்கு விலை ரூ1.70 குறைந்து பங்கின் விலை ரூ.120.65 ஆக குறைந்தது.
பஜாஜ் ஆட்டோ பங்கு விலை ரூ.64.55 குறைந்து பங்கின் விலை ரூ.2339.45 ஆக குறைந்தது.
பார்தி ஏர்டெல் பங்கு விலை ரூ.35.55 குறைந்து பங்கின் விலை ரூ.900.40 ஆக குறைந்தது.
பி.ஹெச்.இ.எல். பங்கு விலை ரூ.57.30 குறைந்து பங்கின் விலை ரூ.2029.00 ஆக குறைந்தது.

சிப்லா பங்கு விலை ரூ.0.80 குறைந்து பங்கின் விலை ரூ.202.15 ஆக குறைந்தது
டி.எல்.எப். பங்கு விலை ரூ.20.20 குறைந்து பங்கின் விலை ரூ.869.85 ஆக குறைந்தது
கிரேசம் பங்கு விலை ரூ.78.75 குறைந்து பங்கின் விலை ரூ.2900.00 ஆக குறைந்தது.
ஹெச்.டி.எப்.சி பங்கு விலை ரூ.93.80 குறைந்து பங்கின் விலை ரூ.2975.85 ஆக குறைந்தது.
ஹெச்.டி.எப்.சி வங்கி பங்கு விலை ரூ.17.35 குறைந்து பங்கின் விலை1497.75 ஆக குறைந்தது.
ஹின்டால்கோ பங்கு விலை ரூ.8.90 குறைந்து பங்கின் விலை ரூ.173.05 ஆக குறைந்தது
ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு விலை ரூ.4.00 குறைந்து பங்கின் விலை ரூ.205.05 ஆக குறைந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கு விலை ரூ.36.95 குறைந்து பங்கின் விலை ரூ.1152.60 ஆக குறைந்தது.
இன்போசியஸ் பங்கு விலை ரூ.100.65 குறைந்து பங்கின் விலை ரூ.1510.60 ஆக குறைந்தது
ஐ.டி.சி பங்கு விலை ரூ.5.80 குறைந்து பங்கின் விலை ரூ.199.95 ஆக குறைந்தது
எல்.அண்ட்.டி பங்கு விலை ரூ.74.45 குறைந்து பங்கின் விலை ரூ.3780.60 ஆக குறைந்தது.
மாருதி பங்கு விலை ரூ.42.10 குறைந்து. பங்கின் விலை ரூ.830.25 ஆக குறைந்தது.
மகேந்திரா அண்ட் மகேந்திரா பங்கு விலை ரூ.16.50 குறைந்து.பங்கின் விலை ரூ.664.05 ஆக குறைந்தது.
என்.டி.பி.சி பங்கு விலை ரூ.5.55 குறைந்து பங்கின் விலை ரூ.217.55 ஆக குறைந்தது.
ஓ.என்.ஜி.சி பங்கு விலை ரூ.47.35 குறைந்து பங்கின் விலை ரூ.1026.95 ஆக குறைந்தது.
ரான்பாக்ஸி பங்கு விலை ரூ.3.90 குறைந்து பங்கு விலை ரூ.383.35 ஆக குறைந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை 63.95 குறைந்து பங்கின் விலை ரூ.2552.05 ஆக குறைந்தது.
சத்யம் பங்கு விலை ரூ.29.55 குறைந்து பங்கின் விலை ரூ.408.65 ஆக குறைந்தது.
எஸ்.பி.ஐ. பங்கு விலை ரூ.45.25 குறைந்து பங்கின் விலை ரூ.2183.10 ஆக குறைந்தது.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ரூ.19.30 குறைந்து பங்கின் விலை ரூ.736.25 ஆக குறைந்தது.
டாடா ஸ்டீல் பங்கு விலை ரூ.18.35 குறைந்து பங்கின் விலை ரூ.799.45 ஆக குறைந்தது.
டி.சி.எஸ். பங்கு விலை ரூ.48.90 குறைந்து பங்கின் விலை ரூ.900.55 ஆக குறைந்தது.
விப்ரோ பங்கு விலை ரூ.29.30 குறைந்து பங்கின் விலை ரூ.425.00 ஆக குறைந்தது.

விலை அதிகரித்த பங்கு விபரம்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை ரூ.4.60 அதிகரித்து பங்கின் விலை ரூ.681.60 ஆக உயர்ந்தது.

ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு விலை ரூ.30.05 அதிகரித்து பங்கு விலை ரூ.2056.35 ஆக அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்