பங்குச் சந்தை இன்று

புதன், 6 பிப்ரவரி 2008 (10:28 IST)
பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது அதிக அளவு மாற்றம் இருக்காது. நேற்று இறுதியில் இருந்தது போலவே குறியீட்டு எண்கள் இருக்கும். அல்லது நிஃப்டி 20 முதல் 30 புள்ளிகள் வரை வித்தியாசமாக இருக்கும். காலையில் வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 5,500 என்ற அளவில் நிலை கொண்டால், இது உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் நிஃப்டி 5465 க்கு மேல் இருந்தால் 5500/5550 வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. 5,500க்கும் மேல் அதிகரி்த்தால் பிறகு 5630 வரை உயர வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த நிலை அதிக நேரம் நீடிக்காது. இது 5,435 முதல் 5,380 என்ற நிலைக்கு சரிந்தால் பங்குகளை அதிக அளவு விற்பனை செய்வார்கள். இதனால் 5340/5290 வரை குறைய வாய்ப்பு உள்ளது.

இன்று ஆர்.என்.ஆர்.எல், ஆர்சிட் கெமிக்கல்ஸ், டாடா ஸ்டீல், என்.டி.பி.சி, நெய்வேலி லிக்னைட், நாகர்ஜீனா பெர்டிலைசர்ஸ்,கேரின் இந்தியா,ஜே.பி.ஹைட்ரோ, சத்யம் கம்‌‌ப்யூட்டர் ஆகிய பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடக்க வாய்ப்பு உள்ளது.

நேற்று காலையில் பங்குச் சந்தை துவங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. மற்ற நாடுகளில் மந்த நிலை காணப்பட்டதால், அதன் தாக்கம் இங்கும் இருந்தது. மிட் கேப், சுமால் கேப், பெரிய நிறுவனங்களின் பங்குகளில் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அதிக அளவு வர்த்தகம் நடைபெறவில்லை. சென்செக்ஸ் அதிக அளவில் மாற்றம் இல்லை. 18,663 என்ற அளவில் முடிந்தது. நிஃப்டி 20 புள்ளிகள் அதிகரித்து 5484 என்ற அளவில் முடிந்தது. நேற்று ரூ.48,740 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தது. நேற்று முன்தினம் ரூ.59,672 கோடி மதிப்புள்ள பங்குகள் வர்த்தகம் நடந்தது.

நேற்று உலோக உற்பத்தி நிறுவனங்கள், மின் உற்பத்தி,சர்க்கரை ஆலை ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் அதிக அளவு ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக பஜாஜ் ஹிந்த், டிஸ்கோ ஸ்டீல், ஜே.பி.ஹைட்ரோ, ஆர்.என்.ஆர்.எல், நெய்வேலி லிக்னைட், நாகர்ஜீனா பெர்டிலைசர், சோபா டெவலப்பர்ஸ், ஆர்.பி.எல், ரிலையன்ஸ் கேப்பிடல், எஸ்கார்ட், என்.டி.பி.சி ஆகிய பங்குகளில் ஆர்வம் காண்பித்தார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்