மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் இருந்து ஏற்ற இறக்கமாக இருக்கின்றது.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் 10 மணியளவில் சென்செக்ஸ் 29.09 புள்ளிகள் உயர்ந்து, குறியீட்டு எண் 18,689.41 ஆக இருந்தது. காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 159 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,491 ஆக குறைந்தது. அதற்கு பிறகு நடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகரித்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 16.35 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,479.85 ஆக இருந்தது.
இன்று தைவானைத் தவிர மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தே காணப்பட்டன. நேற்று உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.731.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கினார்கள். அதே போல் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.163.74 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கினார்கள்.