மும்பையில் தங்கம் வெள்ளியின் விலை இன்று அதிகரித்தது.
24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.65 அதிகரித்தது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததால், நியூயார்க் சந்தையிலும் விலை அதிகரித்தது தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 923.00/924.50 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 921.10/921.80 டாலர்.
தங்கத்தின் விலை அதிகரித்த அதே சமயம் வெள்ளியின் விலை குறைந்தது. 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 16.75/16.80 டாலர். நேற்றைய விலை 16.82/ 16.87 டாலர்.
மும்பையில் இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,855 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,800 பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,085