இந்திய பங்குச் சந்தைகளில் இன்று ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பங்குகளின் விலை குறைந்து குறியீட்டு எண்கள் குறைந்தன.
அதே நேரத்தில் ஆசியா, அமெரிக்க பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மற்ற அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளின் நிலவரத்தை ஒட்டியே இந்திய பங்குச் சந்தையும் இயங்கும்.
இன்று இதற்கு மாறாக அந்நியச் பங்குச் சந்தை உயர்ந்த அதே நேரத்தில் இந்திய பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி மேலும் அரை விழுக்காடு வட்டி குறைக்க போகின்றது என்ற தகவல்களால், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் காலையில் இந்தியாவில் ஆர்வத்துடன் முதலீடு செய்தன. இதனால் காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 288 புள்ளிகளும், நிஃப்டி 85 புள்ளிகளும் அதிகரித்தன.
ரிசர்வ் வங்கி பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்ட பிறகு வட்டி குறைப்பு இல்லை என அறிவித்தது. இதனால் காலையில் இருந்த ஆர்வம் அப்படியே காணாமல் போய்விட்டது. பங்குகளின் விலை குறையத் துவங்கி குறீயீட்டு எண்கள் 1 விழுக்காடு வரை குறைந்தது.
பிறகு சிறிது முன்னேறியது. ஆனால் பங்குகளின் விலையில் அதிக அளவு மாற்றங்கள் இருந்தன.
இறுதியில் மும்பை சென்செக்ஸ் 60.84 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,091.94 ஆக முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 17,927.92 புள்ளிகள் வரை குறைந்தது. அதே போல் 18,491.06 புள்ளிகள் வரை அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி அதிக சேதாரம் இல்லாமல் 6.70 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5280.80 ஆக முடிந்தது. இன்று நடந்த வர்த்தகத்தில் நிஃப்டி அதிகபட்சமாக 5391.60 ஆக உயர்நதது. இதற்கு நேர்மாறாக 5225.25 என்ற அளவிற்கு குறைந்தது.
இந்திய பங்குச் சந்தை பொருத்த அளவில் அதிக ஆபத்து இல்லை. நீண்ட காலம் வர்த்தகம் செய்பவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. அன்றே வாங்கி விற்பவர்களுக்கு பாதிப்பாக இருக்கலாம்.
இன்று நிஃப்டி அதிக அளவு ஏற்ற இறக்கம் இருந்ததற்கு காரணம் புரோக்கர்கள் அதிக அளவு வாங்கி விற்பனை செய்ததே என்று மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்ச்க்ஸ் குறைந்தாலும், மிட் கேப் 34.56, சுமால் கேப் 74.16 புள்ளிகள் அதிகரித்தன. ஆனால் பி..எஸ்.இ-500 13.22 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி 64.15, சி.என்.எக்ஸ் டிப்டி 10 புள்ளிகள் அதிகரித்தன.
நிஃப்டி ஜீனியர் 126.60, பாங்க் நிஃப்டி 332.30, சி.என்.எக்ஸ் 100- 3.85, சி.என்.எக்ஸ் 500- 6.25, மிட் கேப் 27.75, மிடேகேப் 50-2.35 புள்ளிகள் குறைந்தன.
பங்குகளின் இறுதி விலை நிலவரம் :
மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் வர்த்தகம் முடிந்த போது பங்குகள் விலை உயர்வு விபரம்.
ஏ.சி.சி. பங்கு விலை ரூ.7.00 அதிகரித்து பங்கின் விலை ரூ.791.65 ஆக குறைந்தது.
அம்புஜா சிமெண்ட் பங்கு விலை ரூ2.35 அதிகரித்து பங்கின் விலை ரூ.117.40 ஆக உயர்ந்தது.
பஜாஜ் ஆட்டோ பங்கு விலை ரூ.69.35 குறைந்து பங்கின் விலை ரூ.2390.00 ஆக குறைந்தது.
பார்தி ஏர்டெல் பங்கு விலை ரூ.19.30 குறைந்து பங்கின் விலை ரூ.850.40 ஆக குறைந்தது.
பி.ஹெச்.இ.எல் பங்கு விலை ரூ.40.35 குறைந்து பங்கின் விலை ரூ.2051.95 ஆக குறைந்தது.
சிப்லா பங்கு விலை ரூ.6.15 அதிகரித்து பங்கின் விலை ரூ.190.75 ஆக உயர்ந்தது.
டி.எல்.எப் பங்கு விலை ரூ.9.30 குறைந்து பங்கின் விலை ரூ.883.20 ஆக குறைந்தது.
கிரேசம் பங்கு விலை ரூ.3.95 அதிகரித்து பங்கின் விலை ரூ.2951.50 ஆக அதிகரித்தது.
ஹெச்.டி.எப்.சி பங்கு விலை ரூ.68.75 அதிகரித்து பங்கின் விலை ரூ.2850.50 ஆக உயர்ந்தது.
ஹெச்.டி.எப்.சி வங்கி பங்கு விலை ரூ.53.25 குறைந்து பங்கின் விலை ரூ.1531.75 ஆக குறைந்தது.
ஹின்டால்கோ பங்கு விலை ரூ.5.95 அதிகரித்து பங்கின் விலை ரூ.179.75 ஆக அதிகரித்தது.
ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு விலை ரூ.7.90 அதிகரித்து பங்கின் விலை ரூ.207.25 ஆக உயர்ந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கு விலை ரூ.53.40 குறைந்து பங்கின் விலை ரூ.1220.30 ஆக உயர்நதது.
இன்போசியஸ் பங்கு விலை ரூ.46.35 அதிகரித்து பங்கின் விலை ரூ.1492.85 ஆக குறைந்தது.
ஐ.டி.சி பங்கு விலை ரூ.4.75 அதிகரித்து பங்கின் விலை ரூ.201.10 ஆக அதிகரித்தது.
எல்.அண்ட்.டி பங்கு விலை ரூ.74.90 குறைந்து பங்கின் விலை ரூ.3770 ஆக குறைந்தது.
மாருதி பங்கு விலை ரூ.5.40 குறைந்து பங்கின் விலை ரூ.857.20 ஆக குறைந்தது.
மகேந்திரா அண்ட் மகேந்திரா பங்கு விலை ரூ.15.40 அதிகரித்து பங்கின் விலை ரூ.701.65 ஆக உயர்ந்தது.
என்.டி.பி.சி பங்கு விலை ரூ.1.20 குறைந்து பங்கின் விலை ரூ.211.65 ஆக குறைந்தது.
ஓ.என்.ஜி.சி பங்கு விலை ரூ.18 அதிகரித்து பங்கின் விலை ரூ.1018.80 ஆக உயர்ந்தது.
ரான்பாக்ஸி பங்கு விலை ரூ.4.90 அதிகரித்து பங்கின் விலை ரூ.355.30 ஆக அதிகரித்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை ரூ.3.40 குறைந்து பங்கின் விலை ரூ.642.85 ஆக குறைந்தது.
ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு விலை ரூ.9.20 அதிகரித்து பங்கின் விலை ரூ.2106.90 ஆக உயர்ந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை ரூ.11.65 அதிகரித்து பங்கின் விலை ரூ.2575.65 ஆக உயர்ந்தது.
சத்யம் பங்கு விலை ரூ.1.65 குறைந்து பங்கின் விலை ரூ.396.85 ஆக குறைந்தது.
எஸ்.பி.ஐ. பங்கு விலை ரூ.82.60 குறைந்து பங்கின் விலை ரூ.2225.10 ஆக குறைந்தது.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ரூ.1.05 அதிகரித்து பங்கின் விலை ரூ.715.75 ஆக உயர்ந்தது.
டாடா ஸ்டீல் பங்கு விலை ரூ.17.80 அதிகரித்து பங்கின் விலை ரூ.716.20 ஆக அதிகரித்தது.
டி.சி.எஸ். பங்கு விலை ரூ.9.05 அதிகரித்து பங்கின் விலை ரூ.863.25 ஆக உயர்ந்தது.
விப்ரோ பங்கு விலை ரூ.6.45 அதிகரித்து பங்கின் விலை ரூ.412.70 ஆக உயர்ந்தது.