பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (11:55 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் ரிசர்வ் வங்கி வட்டி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 314 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,467.07 ஆக உயர்ந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 102.70 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,376.07 ஆக அதிகரித்தது. ஆனால் இதே நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகளஏற்ற இறக்கமாக இருந்தது.

காலை 11.15 நிலவரப்படி சென்செக்ஸ் 185.08 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,337.88 ஆக இருந்தது.
மிட் கேப் 92.60, சுமால் கேப் 137.62, பி.எஸ்.இ-500 73.91 புள்ளிகள் உயர்ந்து இருந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 66.90 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,341.00 ஆக இருந்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நேற்று வங்கி பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தது. இதற்கு நேர் மாறாக இன்று வங்கி பிரிவு பங்குகளின் விலை குறைந்து, இதன் குறியீட்டு எண் 2.34 விழுக்காடு குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் டிப்டி, ஐ.டி தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. மற்ற அயல்நாட்டு பங்குச் சந்தைகளிலஅமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர் உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கை, அடுத்த மூன்று மாதத்திற்கான கொள்கைகள் பற்றிய அறிவிப்பை தொடர்ந்தே, பங்குச் சந்தையின் போக்கு இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்