சென்செக்ஸ் 1,140 புள்ளிகள் உயர்வு!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (19:21 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1139.92 புள்ளிகள் அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு, நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினர்.

கடந்த வாராம் முழுவதும் நிலவிவந்த நிலை மாறி, நேற்று பங்கு விலைகள் அதிகரிக்க துவங்கின. இதனால் சென்செக்ஸ் குறியீட்டு எண் அதிகரித்தது. ஆனால் நேற்று இறுதியில் 370 புள்ளிகள் குறைந்து பலரை கலவரப்படுத்தியது.
இதற்கு நேர்மாறாக இன்று தொடர்ந்து பங்கு விலைகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,139.92 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,361.66 ஆக உயர்ந்தது.
இதே போல் மிட் கேப் 483.22, சுமால் கேப் 406.94, பி.எஸ்.இ.-500 482.18 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 817.15 புள்ளிகளும், சி.என்.எக்ஸ். ஐ.டி. 222.10 பாங்க் நிஃப்டி 618.40 சி.என்.எக்ஸ்.100-

352.60 சி.என்.எக்ஸ். டிப்டி 316.20 சி.என்.எக்ஸ். 500- 300.10 சி.என்.எக்ஸ். மிட் கேப் 464.90 நிஃப்டி சி.என்.எக்ஸ். மிட்கேப் 50- 211.80 புள்ளிகள் அதிகரித்தன.

இதற்கு முன் ஒரே நாளில் அதிகமாக சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்த விபரம். 14-11-2007 893.58 புள்ளிகள் 23-01-2008: 864.13 புள்ளிகள், 23-10-07 878.85 புள்ளிகள், 9-11-2007 788.85 புள்ளிகள் அதிகரித்தன

இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே இன்று முதன் முறையாக 1,140 புள்ளிகள் அதிகரித்து புதிய சாதனை ஏற்பட்டது.

இன்று 2,758 பங்குகளில் வர்த்தகம் நடந்தது. இதில் 1,561 பங்குகளின் விலை அதிகரித்தது, 652 பங்குகளின் விலை குறைந்தது.

பங்குகளின் இறுதி விலை நிலவரம் :

மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் வர்த்தகம் முடிந்த போது பங்குகள் விலை உயர்வு விபரம்.

ஏ.சி.சி. பங்கு விலை ரூ.35.70 பங்கின் விலை ரூ.787.70 ஆக உயர்ந்தது.

அம்புஜா சிமெண்ட் பங்கு விலை ரூ0.20 பைசா அதிகரித்து பங்கின் விலை ரூ.117.10 ஆக குறைந்தது.

பஜாஜ் ஆட்டோ பங்கு விலை ரூ.190.35 அதிகரித்து பங்கின் விலை ரூ.2300 ஆக அதிகரித்தது.

பார்தி ஏர்டெல் பங்கு விலை ரூ.62.25 அதிகரித்து பங்கின் விலை ரூ.914.60 ஆக உயர்ந்தது.

பி.ஹெச்.இ.எல் பங்கு விலை ரூ.69.46 50.20 அதிகரித்து பங்கின் விலை ரூ.2165.ஆக உயர்நதது.

சிப்லா பங்கு விலை ரூ.8.10 அதிகரித்து பங்கின் விலை ரூ.183.30 ஆக உயர்ந்தது.

டி.எல்.எப் பங்கு விலை ரூ.52.55 அதிகரித்து பங்கின் விலை ரூ.945.10 ஆக அதிகரித்து.

கிரேசம் பங்கு விலை ரூ.138.50 அதிகரித்து பங்கின் விலை ரூ.3033.45 ஆக உயர்ந்தது.

ஹெச்.டி.எப்.சி பங்கு விலை ரூ.99.85 அதிகரித்து பங்கின் விலை ரூ.2713.35 ஆக உயர்ந்தது.

ஹெச்.டி.எப்.சி வங்கி பங்கு விலை ரூ.94.20 அதிகரித்து பங்கின் விலை ரூ.1601.40 ஆக உயர்ந்தது.

ஹின்டால்கோ பங்கு விலை ரூ.21.30 அதிகரித்து பங்கின் விலை ரூ.21.30 ஆக அதிகரித்தது.

ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு விலை ரூ.11.70 அதிகரித்து பங்கின் விலை ரூ.199.30 ஆக உயர்ந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கு விலை ரூ.126.45 அதிகரித்து பங்கின் விலை ரூ.1295.25 ஆக உயர்நதது.

இன்போசியஸ் பங்கு விலை ரூ.100.40 அதிகரித்து பங்கின் விலை ரூ.1521 ஆக அதிகரித்தத

ஐ.டி.சி பங்கு விலை ரூ.9.70 அதிகரித்து பங்கின் விலை ரூ.198.20 ஆக உயர்ந்தது. .

எல்.அண்ட்.டி பங்கு விலை ரூ.352.05 அதிகரித்து பங்கின் விலை ரூ.3890.40 ஆக உயர்ந்தது.

மாருதி பங்கு விலை ரூ.32.05 அதிகரித்து பங்கின் விலை ரூ.829.65 ஆக அதிகரித்தத

மகேந்திரா அண்ட் மகேந்திரா பங்கு விலை ரூ.48.55 அதிகரித்து பங்கின் விலை ரூ.674.20 ஆக உயர்ந்தது.

என்.டி.பி.சி பங்கு விலை ரூ.18.55 அதிகரித்து பங்கின் விலை ரூ.222.25 ஆக உயர்ந்தது.

ஓ.என்.ஜி.சி பங்கு விலை ரூ.71.20 அதிகரித்து பங்கின் விலை ரூ.1015.45 ஆக அதிகரித்தத

ரான்பாக்ஸி பங்கு விலை ரூ.21.15 அதிகரித்து பங்கின் விலை ரூ.367.95 ஆக அதிகரித்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை ரூ.43.80 அதிகரித்து பங்கின் விலை ரூ.668.40 ஆக உயர்ந்தது.

ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு விலை ரூ.214.40 அதிகரித்து பங்கின் விலை ரூ.2030.25 ஆக உயர்ந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை ரூ.119 அதிகரித்து பங்கின் விலை ரூ.2609.55 ஆக குறைந்தது.

சத்யம் பங்கு விலை ரூ.6.25 அதிகரித்து பங்கின் விலை ரூ.406.30 ஆக உயர்ந்தது.

எஸ்.பி.ஐ. பங்கு விலை ரூ.59.10 அதிகரித்து பங்கின் விலை ரூ.2405.00 ஆக உயர்ந்தது.

டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ரூ.50.90 அதிகரித்து பங்கின் விலை ரூ.712.35 ஆக உயர்ந்தது.

டாடா ஸ்டீல் பங்கு விலை ரூ.42.75 அதிகரித்து பங்கின் விலை ரூ.714.10 ஆக அதிகரித்தது.

டி.சி.எஸ். பங்கு விலை ரூ.38.85 அதிகரித்து பங்கின் விலை ரூ.881.55 ஆக உயர்ந்தது.

விப்ரோ பங்கு விலை ரூ.17.70 அதிகரித்து பங்கின் விலை ரூ.429.20 ஆக குறைந்தது.

இன்று சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 பங்குகளில், வர்த்தகம் முடிவடைந்த இறுதி நிலவரப்படி எல்லா பங்கு விலைகளும் அதிகரித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்