மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.70-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.10-ம் அதிகரித்தது.
சிங்கப்பூர் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று அதிகரித்தது. இங்கு கடந்த இரண்டு தினங்களாக விலை குறைந்தது. சில தினங்களாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்ததுள்ளது. இதனால் விலைகள் உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நியூயார்க் சந்தையிலும் தங்கத்தி்ன் விலை 1 அவுன்சுக்கு 5 டாலர் அதிகரித்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 891.25/892.50 டாலராக இருந்தது. நேற்றைய விலை 884.75/885.45 டாலர். இதே போல் வெள்ளியின் விலையும் சிறிது அதிகரித்தது. 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 16.02/16.07 டாலர். நேற்றைய இறுதி விலை 15.97/16.02.
இந்த வருடம் தங்கத்தின் விலை 20 விழுக்காடு அதிகரிக்கும். அமெரிக்க டாலர் மதிப்பு குறைவது, பணவீக்கம் அதிகரிப்பதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் அடுத்த வருடமும் தங்கத்தின் விலை அதிக அளவிலேயே இருக்கும் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் 50 தங்க வர்த்தகர்களும், சந்தை ஆய்வாளர்களும் தெரிவித்தனர்.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,445 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,390 பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,640