பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்த‌ம்!

செவ்வாய், 22 ஜனவரி 2008 (17:45 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் 2,029.05 புள்ளிகள் சரிந்தது (11.53 விழுக்காடு). இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 630.45 புள்ளிகள் குறைந்தது (12.10 விழுக்காடு).

இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் குறைந்தபட்ச அளவை விட, அதிகமாக குறைந்த காரணத்தினால் பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது. 10.55 மணிக்கு மீண்டும் வர்த்தகம் துவங்கும்.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் சரிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்