பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

திங்கள், 21 ஜனவரி 2008 (11:45 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகள், இன்று கடும் சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே எல்லா குறியீ்ட்டு எண்களும் சரிவை சந்தித்தன. காலை 10 மணி அளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தைவிட 436.70 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,577.00 ஆக இருந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 19,013.70) .

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 138.30 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5567 ஆக இருந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 5,705.30).

இரண்டு பங்குச் சந்தைகளிலும் தொடர்ந்து எல்லா பிரிவு பங்குகளின் விலையும் குறைந்தது. காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 441.26 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,572.44 ஆக இருந்தது.

மிட் கேப் 396.30, சுமால் கேப் 566.40, பி.எஸ்.இ-500 262.85 புள்ளிகள் குறைந்து இருந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 134.35 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,570.95 ஆக இருந்தது. இத்துடன் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 2.81 விழுக்காடு முதல் 5.35 விழுக்காடு வரை குறைந்‌திருந்தன. இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் பங்குச் சந்தையும் சரிவை சந்தித்தன.

அமெரிக்காவின் நாஸ்டாக் 6.88, எஸ் அண்ட் பி 500 பிரிவு 8.06 புள்ளிகள் குறைந்தது. ஹாங்காங்கின் ஹாங்செங் 714.60, சிங்கப்பூரின் ஸ்டெர்ட்டைம்ஸ் 78.47, ஜப்பானின் நிக்கி 520.62 புள்ளிகள் குறைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்