பங்குச் சந்தை 3 புள்ளிகள் குறைவு!

புதன், 9 ஜனவரி 2008 (19:19 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று நாள் முழுவதும் நி்லையில்லாத நிலையே இருந்தது. காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் உட்பட எல்லா பிரிவு பங்குகளின் விலையும் குறைந்தது. நாள் முழுவதும் முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதும், விற்பதுமான வர்த்தகத்தில் ஈடுபட்டன.

வர்த்தகம் முடியும் போது மாலை சென்செக்ஸ் 3.55 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 20,869.78 ஆக முடிந்தது. அதே போல் மிட் கேப் 47.08, சுமால் கேப் 146.18, பி.எஸ்.இ-500 20.88 புள்ளிகள் குறைந்தன.

இன்று நடந்த வர்த்தகத்தில் வாகன உற்பத்தி, வங்கி, நுகர்வேர் தயாரிப்பு நிறுவனங்கள், இயந்திர உற்பத்தி நிறுவனங்கள், உலோக உற்பத்தி, ஆகியவற்றின் விலை குறைந்தது. தகவல் தொழில் நுடப பங்குகளின் விலை அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் ரூ.9,610 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தது. நேற்று ரூ.11 ஆயிரத்து 870 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்