தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு!

புதன், 9 ஜனவரி 2008 (13:25 IST)
மும்பை தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவிற்கு (10 கிராம்) ரூ.11,080 ஆக உயர்ந்தது. இது நேற்றைய விலையை விட ரூ.150 அதிகம்.

மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 அதிகரித்தது. இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.70 அதிகரித்தது.
அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவல்களால் வர்த்தகர்கள் தங்கத்தை அதிக அளவு விற்பனை செய்ய வில்லை. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்றைய இறுதி விலை நிலவரம்.
24 காரட் 10 கிராம் ரூ.11,125 (நேற்று 10,980)
22 காரட் 10 கிராம் ரூ.11,080 (10,930)
பார் வெள்ளி கிலோ ரூ.19,915 (19,845).

வெப்துனியாவைப் படிக்கவும்