மும்பை சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிவு!

வியாழன், 3 ஜனவரி 2008 (19:35 IST)
மும்பை பங்குச் சந்தையில் கடந்த இரணடு நாட்களாக இருந்த நிலை இன்று மாறியது. இந்த வருடத்தின் முதல் நாளான 1 ந் தேதியும், நேற்றும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அதிகரித்தது. ஆனால் இன்று மாலையில் 120.10 புள்ளிகள் குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 55 புள்ளிகள் குறைநத்து இருநதது. முதலீட்டாளர்கள் நேற்றைய இலாப கணக்கை பார்க்க பங்குகளை விற்பனை செய்ததால், சென்செக்ஸ் குறைந்தது.

பிறகு ஒரே நிலையாக இல்லாமல் அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சென்செக்ஸ் படிப்படியாக சரிய தொடங்கியது. இறுதியில் 120.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 20,345.20 ஆக முடிந்தது.

இன்று தகவல் தொழில் நுட்பம், நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், வங்கி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்தன. மிட் கேப், சுமால் கேப் பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் இறுதியில் அதிக அளவு குறையாமல் முடிந்தது.

தேசிய பங்குச் சந்தையி்ன் நிஃப்டி 0.95 புள்ளி குறைந்து 6,178.55 ஆக முடிந்தது. இன்று ஒரு நிலையில் நிஃப்டி 6,230 ஆக அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்