பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (12:11 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ், நிஃடி பிரிவில் உள்ள பங்குகளின் விலைகள் சரிந்தது.

பெனாஷிர் புட்டோ சுட்டுக் கொல்லப்ட்டதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தனர். அத்துடன் பங்குச் சந்தையின் வாரத்தின் கடைசி நாளாக இருப்பதால் கணக்கு முடிப்பதற்காக பங்குகளை அதிகளவு விற்பனை செய்ததால் தொடர்ந்து இரண்டு குறீயீட்டு எண்களும் சரிநதன.

ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு நிலைமை மாறியது. மீண்டும் பங்கு விலைகள் அதிகரிக்க துவங்கின. அதே நேரத்தில் பங்குகளின் விலைகள் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
காலை 11 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 7.56 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,224.28 ஆக இருந்தது. அதே போல் நிஃப்டி 0.70 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 6,082.20 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 83.42, சுமால் கேப் 153.48, பி.எஸ்.இ-500 38.21 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

தேசிய பங்குச் சந்தையில் ஐ.டி., சி.என்.எக்ஸ். டிப்டி ஆகிய பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்கள் குறைந்து காணப்பட்டன.

இன்று பங்குகளின் விலைகளில் அடிக்கடி மாற்றம் இருக்கும். சில பங்குகளின் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.

மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல்.அண்ட் டி., சத்யம், டாடா மோட்டார்ஸ், பி.ஹெச்.இ.எல்., சிப்லா, டி.சி.எஸ்., விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து காணப்பட்டது.

ஐ.டி.சி., மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட், டி.எல்.எப்., ஹின்டால்கோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், கிராசிம், ஹெச்.டி.எப்.சி. ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து காணப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்