பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

வியாழன், 27 டிசம்பர் 2007 (11:21 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் நேற்று போலவே இன்றும் பங்கு விலைகள் அதிகரித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 85.05 புள்ளிகள் உயர்ந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 25.30 புள்ளிகள் அதிகரித்தது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்கு விலை அதிகரித்ததே.

மும்பை பங்குச் சந்தையில் காலை அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளில் மந்த போக்கு நிலவுகிறது. நாளை பங்கு சந்தையில் வார கணக்கு முடிக்கும் நாள். இன்று பல முதலீட்டு நிறுவனங்கள் இருப்பில் உள்ள சில பங்குகளை விற்பனை செய்து, புதிய பங்குகளில் முதலீடு செய்யும் போக்கு தொடரும். எனவே இன்று பங்க சந்தை ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் காலை 10.30 மணி அளவிலி 69.62 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 20,262.14 ஆக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.55 புள்ளிகள் அதிகரித்து குறீயீட்டு எண் 6,085.30 புள்ளிகளாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 81.59, சுமால் கேப் 206.06, பி.எஸ்.இ-500 50.27 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃடி ஜூனியர், ஐ.டி., .சி.என்எக்ஸ்.-100, சி.என்.எக்ஸ். டிப்டி ஆகிய பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்கள் குறைந்து காணப்பட்டன.

இன்று பங்குகளின் விலைகளில் அடிக்கடி மாற்றம் இருக்கும். சில பங்குகளின் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.
மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எல்.அண்ட்.டி., ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், ஏ.சி.சி., பி.ஹெச்.இ.எல்., சிப்லா, டி.எல்.எப், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி மாருதி, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய பங்குகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், கிராசிம், சத்யம், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, டி.சி.எஸ்., அம்புஜா சிமெண்ட், மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து காணப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்