பங்குச் சந்தைகளில் சரிவு தொடர்கிறது!

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (11:42 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் நேற்றைய நிலவரமே இன்றும் தொடர்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்த பங்குச் சந்தையில் இன்றும் பங்குகளின் விலை குறைந்து, குறியீட்டு எண்கள் குறைந்தன.

காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 113.72 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26.75 புள்ளி அதிகரித்தது.

அதற்கு பின் குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கமாக இருக்கின்றது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 35.38 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 19,225.97 புள்ளியாக இருந்தது. இதன் மற்ற பிரிவுகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன. மிட் கேப் 71.26, சுமால் கேப் 121.70, பி.எஸ்.இ-500 34.25 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 8.20 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,768.20 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
ஹாங்காங், அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட், சிப்லா, டி.எல்.எப்., ஹிந்துஸ்தான் யூனிலிவர், மாருதி, என்.டி.பி.சி.,ஓ.என்,ஜி. சி., சத்யம், எஸ்.பி.ஐ., விப்ரோ, பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்போசியஸ், ஐ.டி.சி. ஆகிய பங்குகளின் விலை உயர்ந்து காணப்படுகின்றன.

கிராசிம், ஹெச்.டி.எப்.சி. வங்கி, எல்.அண்ட்.டி., ரான்பாக்ஸி, ரிஸைன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோ, பி,ஹெச்.இ.எல். ஆகியவற்றின் பங்குகள் விலை குறைந்து உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்