பங்குச் சந்தைகளில் இன்று எல்லா பிரிவில் உள்ள பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கின்றது.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 69.44 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,672.85 புள்ளிகளை தொட்டது.
தேசிய பங்குச் சந்தையில் 15.65 புள்ளிகள் அதிகிரித்து குறியீட்டு எண் 5,880.65 புள்ளிகளாக இருந்தது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை பங்குகளின் விலை அதிகரித்தது. ஆனால் இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கின்றது.
காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 30.31 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,633.72 ஆக இருந்தது. இதே போல் மிட்கேப் 83, சுமால் கேப் 130.63, பி.எஸ்.இ-500 44.65 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 11.95 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5876.95 புள்ளிகளாக இருந்தது.
மற்ற நாட்டு பங்கு சந்தைகளில் பங்குகள் விலை குறைந்து குறியீட்டு எண் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், பி.ஹெச்.இ.எல், இன்போசியஸ், ஐ.டி.சி, என்.டி.பி.சி, எஸ்.பி.ஐ, சிப்லா, டி.எல்.எப், ஹிந்துஸ்தான் யூனிலிவர், எல்.அண்ட்.டி, மகேந்திரா அண்ட் மகேந்திரா,சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து காணப்பட்டன.
பஜாஜ் ஆட்டோ, பார்தி எர்டெல், கிரேசம், ஹெச்.டி.எப்.சி. ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹிந்தால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து காணப்பட்டன.
நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை சரிந்தது. கடந்த நான்கு நாட்களாக பங்குகளின் விலை அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நிதி நெருக்கடியால் சென்ற மாதம் பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளது. அத்துடன் மறுகடன் நஷ்டத்தில் இருந்து வங்கிகளின் நிதி நிலைமை நெருக்கடி தொடர்வதால் பங்குகளின் விலை குறைந்தது. இன்று மற்ற ஆசிய நாட்டு சந்தைகளிலும் பங்குகளின் விலை குறைந்தது. ஜப்பானின் நிக்கி 0.22 விழுக்காடு குறைந்தது. தைவான் பங்குச் சந்தை குறியீட்டு எண் 0.07 விழுக்காடு குறைந்தது.