பங்குச் சந்தை ஏற்றம்!

Webdunia

திங்கள், 3 டிசம்பர் 2007 (11:06 IST)
மும்பை பங்குச் சந்தையிலும் தேசிய பங்குச் சந்தையிலும் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது.

பங்குச் சந்தைகளி்ல் முதலீட்டு நிறுவனங்கள் மின்உற்பத்தி, பொதுத்துறை நிறுவனங்கள், பெர்ரோலிய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பித்தனர்.

இதனால் வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 159.49 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,522.68 புள்ளிகளை தொட்டது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 61.05 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 5,823.80 புள்ளிகளாக உயர்ந்தது.

காலை 10.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 174.97 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,538.16 புள்ளிகளாக இருந்தது. இதே போல் மிட் கேப் 151.16, சுமால் கேப் 196.47, பி.எஸ்.இ-500 107.33 புள்ளிகள் அதிகரித்தன. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 74.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5762.25 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு வங்கி பிரிவு தவிர மற்ற குறியீட்டு எணகள் ஒரு விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்தன.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எல்.அண்ட்.டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், பி.எஹ்.இ.எல், சிப்லா, ஹிந்டால்கோ, இன்போசியஸ், ஐ.டி.சி, என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி,சத்யம்,எஸ்.பி.ஐ,ஹெச்.டி.எப்.சி,டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், விப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர்,கிரேசம், ரான்பாக்ஸி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து இருந்தன.

பஜாஜ் ஆட்டோ, டி.எல்.எப், ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்து இருந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்