மும்பை தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

புதன், 28 நவம்பர் 2007 (19:34 IST)
மும்பை சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.330-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.405-ம் குறைந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே வெள்ளியின் விலை குறைந்தது. தொழில் துறையினர் வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

இறுதியில் வெள்ளி நேற்றய இறுதி விலையை விட கிலோவுக்கு ரூ.405 குறைந்தது. கடந்த இரண்டு நாட்களில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.510 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க், லண்டன் சந்தையில் 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 14.45/14.30 டாலராக இருந்தது. நேற்றை விலை 14.65/14.75 டாலர்.

இன்றைய இறுதி விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,345 (நேற்று ரூ.10,675 )
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,295 (ரூ.10,625)
பார் வெள்ளி 1 கிலோ ரூ. 19,255 (ரூ.10,660 )

வெப்துனியாவைப் படிக்கவும்