டாலர் மதிப்பு குறைந்தது!

Webdunia

புதன், 28 நவம்பர் 2007 (13:55 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலரின் மதிப்பு ரூ.39.75/39.77 பைசாவாக இருந்தது. (நேற்றைய இறுதி விலை ரூ.39.78).

பிறகு 1 டாலர் ரூ.39.69 முதல் ரூ.39.70 பைசா வரை வர்த்தகம் நடந்தது. டாலருக்கு நிதரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. அதே நேரத்தில் யூரோ, யென் ஆகிய நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் ரிசர்வ் வங்கியின் தலையீட்டினால் அதிகளவு டாலரின் மதிப்பு குறையாது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்