பங்கு‌ சந்தை 123 புள்ளிகள் உயர்வு!

Webdunia

புதன், 28 நவம்பர் 2007 (11:47 IST)
மும்பை பங்கு‌ச் சந்தையிலும், தேசிய பங்கு‌ச் சந்தையிலும் நேற்று இருந்த பின்னடைவு இன்று மாறியது. காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் 189 புள்ளிகள் அதிகரித்தது. நேற்று சென்செக்ஸ் 119 புள்ளிகள் குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 51 புள்ளிகள் அதிகரித்தது.

இந்த முன்னேற்றத்திற்கு காரணம் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகள் குறைந்த விலையில் கிடைப்பதால் முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு வாங்குவதில் ஆர்வம் காட்டின. ரிலையன்ஸ், இன்போசியஸ், ஒ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்தது.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 123.48 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 19,251.16 ஆக இருந்தது. இதே போல் மிட் கேப் 90.62 புள்ளி, சுமால் கேப் 131.56 புள்ளி, பி.எஸ்.இ-500 63.07 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 16.75 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5714.90 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் டாடா மோட்டராஸ், டாடா ஸ்டீல், ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், பஜாஜ் ஆட்டோ, சிப்லா, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், இன்போசியஸ், எல்.அண்ட்.டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் எஸ்.பி.ஐ., பி.ஹெச்.இ.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றின் பங்கு விலை அதிகரித்தது.

ஒ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், விப்ரோ, பார்தி ஏர்டெல், டி.சி.எஸ்., டி.எல்.எப்., கிரேசம், ஹெச்.டி.எப்.சி., ஹின்டார்கோ, ஐ.டி.சி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்து காணப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்