பங்குச் சந்தையில் இன்று பின்னடைவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 119.18 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 19,127.73 ஆக முடிந்தது.
இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 33.55 புள்ளிகள் குறைந்து அதன் குறியீட்டு எண் 5,689.55 ஆக முடிந்தது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததினால் பங்குகளின் விலைகள் குறைந்ததாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.
இன்று உலோக உற்பத்தி நிறுவனங்கள் வங்கிகளின் பங்கு விலை குறைந்தது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. மிட்கேப், சுமால் கேப் பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்தது. சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 பங்குகளில் 15 பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் மிட் கேப் பிரிவு குறியீட்டு எண் 9.24 புள்ளிகளும், சுமால் கேப் 28.82 புள்ளிகளும் அதிகரித்தது. ஆனால் பி.எஸ்.இ-500 17.37 புள்ளிகள் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர், ஐ.டி, மிட்கேப் பிரிவு குறியீட்டு எண் அதிகரித்தது.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் இன்போசிஸ், ஐ.டி.சி, எல்.அண்ட்.டி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஏ.சி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ஏ.சி.சி, பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா ஸ்டீல், ஹின்டால்கோ, ரான்பாக்ஸி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஒ.என்.ஜி.சி,இன்போசியஸ், ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
டி.சி.எஸ், விப்ரோ, அம்புஜா சிமென்ட், பி.ஹெச்.இ.எல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், சத்யம், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பி,ஹெச்.இ.எல்., விப்ரோ, எஸ்.பி.ஐ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.