பங்குச் சந்தை ஏற்றம்

திங்கள், 26 நவம்பர் 2007 (11:28 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக‌ரித்த வண்ணம் உள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வரத்தகம் தொடங்கிய போது சென்செக்ஸ் 403.22 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 123.70 புள்ளிகள் அதிகரித்தது.

இந்தியாவின் பங்குச் சந்தை மட்டுமல்லாமல், ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும், அமெரிக்க பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை அதிகரித்து, அவைகளின் குறியீட்டு எண்களும் உயர்ந்தன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை அதிகரித்தது.

காலை 10.45 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 490.08 புள்ளிகள் அதிகரித்து 19,342.93 புள்ளிகளை தொட்டது. இதே போல் மிட்கேப் 186.91 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 8451.41 புள்ளிகளையும், சுமால் கேப் 254.20 புள்ளிகள் அதிகரித்து 10,425.63 புள்ளிகளையும், பி.எஸ்.இ-500 185.76 புள்ளிகள் அதிகரித்து 7794.50 புள்ளிகளை தொட்டது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 157.15 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5766.15 புள்ளிகளை தொட்டது.
ஜப்பான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 195.43 புள்ளிகள் அதிகரித்தது (1.3 விழக்காடு ). ஹாங்காங் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 3.2 விழுக்காடும், சீனாவின் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 4.3 விழுக்காடும் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, எல்.அண்ட்.டி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, அம்புஜா சிமென்ட், பஜாஜ் ஆடோ, பார்தி ஏர்டெல், சிப்லா, டி.எல்.எப், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹின்டால்கோ, ஒ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, சத்யம், எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, இன்போசியஸ், கிரேசம், ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி, மாருதி, ரான்பாக்ஸி, பி.ஹெச்.இ.எல், சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன. சென்செக்ஸ் பிரிவில் உள்ள எல்லா பங்குகளின் விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்