பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி!

செவ்வாய், 20 நவம்பர் 2007 (21:08 IST)
பங்குச் சந்தையில் இன்று பங்குகளின் விலை குறைந்து, குறியீட்டு எண்கள் சரிந்தன. அந்நிய நாடுகளில் இருந்து வந்த தகவல்களால் பங்கு சந்தைகளில் இந்தச் சரிவு ஏற்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் மறுஈட்டு கடன் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்தது. இதை தொடர்ந்து நேற்று நாஸ்டாக் குறியீட்டு எண் 44 புள்ளிகள் சரிந்தது. இதன் எதிரொலியாக ஆசிய நாட்டு பங்கச் சந்தைகளிலும் பங்குகள் விலை குறைந்து, குறியீட்டு எண்கள் சரிந்தன.

இந்தியாவில் மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் இருந்ததே பங்குகளின் விலை குறைய தொடங்கியது. மதியம் 12 மணியளவில் சிறிது முன்னேற்றம் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் மீண்டும் தொடர்ந்து பங்குகளின் விலை குறைந்தது.

வர்த்தகத்தின் இறுதியில் மும்பை சென்செக்ஸ் 352.56 புள்ளிகள் சரிந்து 19,280.80 புள்ளிகளாக இறங்கியது. இதே போல் மிட்கேப் 104.95 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 144.21 புள்ளிகளும் குறைந்தன. கடந்த வாரத்தில் இருந்து சென்செக்ஸ் பிரிவு குறியீட்டு எண் குறைந்தாலும் சுமால் கேப், மிட் கேப், பி.எஸ்.இ-500 பிரிவு பங்குகள் பாதிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று சுமால் கேப் பிரிவு தவிர மற்ற இரண்டின் குறியீட்டு எண்களும் குறைந்தன. சுமால் கேப் 18.27 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீட்டு எண் 126.75 புள்ளிகள் சரிந்தது. மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, பார்தி ஏர்டெல், கிராசிம், ஹின்டால்கோ, ஐ.டி.சி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, எஸ்.பி.ஐ, பி.ஹெச்.இ.எல், சிப்லா, மகேந்திரா அண்ட் மகேந்திரா, சத்யம், டாடா ஸ்டீல், விப்ரோ, டி.எல்.எப், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எல்.அண்ட் டி, என்.டி.பி.சி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.


























வெப்துனியாவைப் படிக்கவும்