தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு!

Webdunia

வெள்ளி, 9 நவம்பர் 2007 (20:29 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தீபாவளி பண்டிகையை அடுத்து இன்று கொண்டாடப்படும் மகாரத் என்று அழைக்கப்படும் சுபதினத்தினால் தங்கம் வெள்ளியின் விலை அதிகரித்தது.

வட இந்தியாவில் வர்த்தகர்கள், தொழில் துறையினர் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளை மகாரத் தினம் என்று அழைக்கின்றனர். இந்த நாளை சுபதினமாக கருதுகின்றனர். இதனால் இன்று புது கணக்கு தொடங்குகின்றனர். இந்த தினத்தில் தங்கம், வெள்ளி வாங்குவது அதிரஷ்டகரமானது என்ற நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது.

இதை ஒட்டி அன்று மும்பையில் தங்கம், வெள்ளி சந்தை, பங்குச் சந்தை ஆகியன விடுமுறையாக இருந்தாலும் ஒரு அடையாளமாக மாலையில் சிறிது நேரம் இயங்கும்.

இதன்படி இன்று மாலை மும்பை தங்கம் வெள்ளி சந்தையையில் வர்த்தகம் நடைபெற்றது.

இன்று முதல் நாள் வர்த்தகத்திலேயே 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.15-், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.175-ம் அதிகரித்தது.

இன்றைய விலை நிலவரம்

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.10,670 (புதன் விலை 10,655)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.10,625 (10,605)

பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,225 (20,050)

வெப்துனியாவைப் படிக்கவும்