மும்பை : வெள்ளி விலை கடும் உயர்வு!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (16:12 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.210 அதிகரித்தது.

சர்வதேச சந்தையில் கடந்த 27 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளியின் விலை அதிகரித்ததை, தொடர்ந்து மும்பையிலும் விலை அதிகரித்ததாக மும்பை தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையின் தலைவர் சுரேஷ் ஹூன்டியா தெரிவித்தார்.

கடந்த வாரம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த 28 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு உயர்ந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 15.58 டாலராக அதிகரித்தது. இது நேற்றைய விலையை விட 10 சென்ட் உயர்வு. ( நேற்றைய விலை 15.48 டாலர்).

இன்று காலை விலை நிலவரம

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.10,670
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.10,620

பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,685

வெப்துனியாவைப் படிக்கவும்