தங்கம் விலை கடும் உயர்வு!

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (19:35 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு நேற்றைய விலையை விட ரூ.180 உயர்ந்தது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.10,460 ஆக அதிகரித்தது.

இதே போல் பார் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.330 அதிகரித்தது. மாலையில் பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,685 ஆக முடிந்தது.

இறுதி விலை விபரம

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.10,460 ( நேற்று 10,280)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.10,410 ( 10,230)
பார் வெள்ளி கிலோ ரூ.19,685 ( 19,355)

வெப்துனியாவைப் படிக்கவும்