டாலர் மதிப்பு குறைந்தது!

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (13:43 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில காலையில் டாலரின் மதிப்பு குறைந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ.39.26 பைசா என்ற அளவில் விற்பனையானது. பிறகு டாலரின் மதிப்பு அதிகரித்து 1 டாலர் ரூ.39.35 / 31.50 என்ற நிலையில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 4 பைசா குறைவாகும். (நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.39.34)

காலையில் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்ய ஆரம்பித்தவுடன், அந்நியச் செலவாணி சந்தையில் அதிகளவு டாலர் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு குறைந்து. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

டாலர் மதிப்பு சரிவதை தடுக்க ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கி டாலரை வாங்கியதால், 1 டாலரின் மதிப்பு ரூ. 39.35 / 31.50 என்ற அளவிற்கு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்