மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் நேற்று இருந்த நிலைமை இன்று முற்றிலும் மாறியது.
காலையில் வர்த்தகம் தொடங்கப்பட்டதில் இருந்தே சென்செக்ஸ், நிப்டி குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 5 வது நிமிடத்திலேயே சென்செக்ஸ் 278.43 புள்ளிகள் அதிகரித்து 19,869.21 புள்ளிகளை தொட்டது. நேற்று 385 புள்ளிகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது. ( நேற்றைய இறுதி நிலவரம் 19,590.78 )
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டியும் முதல் 5 நிமிடத்தில் 92.50 புள்ளிகள் உயர்ந்து 5,939.80 புள்ளிகளை தொட்டது. காலை 11.15 நிலவரப்படி சென்செக்ஸ் 299.30 புள்ளிகள் அதிகரித்து 19,890.08 புள்ளிகளாக உள்ளது. இதே போல் மிட்கேப் 130.78 புள்ளிகளும், சுமால் கேப் 182.56 புள்ளிகளும், பி.எஸ்.இ - 100 171.88 புள்ளிகளும், பி.எஸ்.இ 200 - 40.26 புள்ளிகளும், பி.எஸ்.இ - 500 130.67 புள்ளிகளும் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் காலை 11.15 நிலவரப்படி நிப்டி 5932.09 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 84.79 புள்ளிகள் அதிகம் (நேற்றைய இறுதி நிலவரம் 5847.30).
மும்பை பங்குச் சந்தையில் பார்தி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹுன்டால்கோ, ஹூந்துஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி, எல்.அண்ட்.டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், விப்ரோ, டி.சி.எஸ், ஏ.சி.சி, ஏ.சி.எல், பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ.எல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்போசியஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.