மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலைகள் குறைந்தது. குறிப்பாக குறியீட்டு எண் பிரிவில் உள்ள நிறுவன பங்குகளின் விலைகள் அதிகளவு குறைந்த்தால சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டு எண்கள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, சென்செக்ஸ் 19,364.61 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 360 புள்ளிகள் குறைவு. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 5,734 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 132 புள்ளிகள் குறைவு. (நேற்றைய இறுதி நிலவரம் 5,866.45)
பிறகு பங்குகளின் விலை சிறிது அதிகரித்தது. காலை 12 மணியளவில் மும்பை பங்குச் சந்தைன் குறியீட்டு எண் சென்செக்ஸ் 19,514.48 புள்ளிகளாக இருநதது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 209.87 புள்ளிகள் குறைவு. (நேற்றைய இறுதி நிலவரம் 19,724.35).
மும்பைச் பங்குச் சந்தையிலும் மிட்கேப் பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன. தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.
மும்பை பங்குச சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் இருக்கும் ஏ.சி.சி, ஏ.சி.எல், பஜாஜ் ஆட்டோ, பாரிதி ஏர்டெல், பி.ஹெச். இ.எல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.டி.எப்.சி, எல். அண்ட் டி, மதேந்திரா அண்ட் மகேந்திரா, .ஒ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், சத்யம், டாடா மோட்டார், டி.சி.எஸ், ஹின்டால்கோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, விப்ரோ ஆகிய நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
இன்போசியஸ், ஐ.டி.சி, கிராசிம் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
அமெரிக்கா, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணை விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் தங்கம், வெள்ளி, நிக்கல் உட்பட உலோகங்களில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்து இலாபம் பார்க்கும் ஹெட்ஜ் நிதிகள், முதலீட்டு நிறுவனங்கள் தங்களின் பார்வையை தங்கம் உட்பட மற்ற உலோகங்களின் பக்கம் திருப்பியுள்ளன. இதுவே பங்குச் சந்தையின் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.